Posts

திருஞான சம்பந்தரின் சிறப்புவாய்ந்த பதிகங்கள்-02:

Image
  திருஞான சம்பந்தரின் சிறப்புவாய்ந்த பதிகங்கள்-02: 1)ஒன்றிலிருந்து ஏழுவரை படிப்படியாய் ஏற்றி இறக்கி இயற்றப்படும் செய்யுள் "ஏழு கூற்றிருக்கை" எனப்படும். இதனை தேர்பந்தம் எனப்படும் சித்திரக்கவியாகவும் அமைத்து காட்டப்படும். இதனை கீழ்க்கண்ட படத்தில் காணலாம். திருபிரம்மபுர தலத்தில் சம்பந்தர் பாடும், "ஓருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை இருவரோ டொருவ னாகி நின்றனை" இத்தலத்து பதிகம்(1-128)வியாழக் குறிஞ்சிப்பண்ணில் திருஏழு கூற்றிருக்கை அமைப்பில் தோன்றியது. இதை மூலமாய் வைத்தே திருமங்கையாழ்வாரும், அருணகிரிநாதரும் பாடியுள்ளனர். 2)தாளத்திற்கேற்ப ஓசையுடன் விளங்கும் பதிகம் திருத்தாளச்சதி எனப்படும்! சீர்காழித்தலத்தில் இயற்றப்பட்ட இப்பதிகமும் வியாழக்குறிஞ்சி பண்ணால் பாடப்பட்டதே, பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப்    பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ் சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்   சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ் சந்தித்தே யிந்தப்பார் சனங்க...

திருஞானசம்பந்தரின் சிறப்புவாய்ந்த பதிகங்கள்

Image
  திருஞானசம்பந்தரின் சிறப்புவாய்ந்த பதிகங்கள்: 1)இயமகம் என்பது ஓரடியில் முன்வந்த சொல் அல்லது தொடர் வேறொரு பொருள்பட மீண்டும் அதே அடியில் மடக்கி வரும் அமைப்பாகும்.இது "யமகம்" என்றும் வழங்கப்படும். பிற்காலத்தில் பல பாடல்களில் இந்த அணி இடம் பெற்றுள்ளது. உதாரணமாய் அருணகிரிநாதரின் திருப்புகழில் வரும், " சுத்தப் பத்தி சித்ரச் சொர்க்க சொர்க்கத்தத்தைக்-கினியோனே " எனும் பாடலை கூறலாம். வடமொழி இசைப்பாடலில் நிறைய இடங்களில் இமயக அணி பயின்று வருகிறது. இவையாவும் 15 ம் நூற்றாண்டுக்கு பின் வந்த பாடல்களே, இவற்றிற்கெல்லாம் முதலில் விதை இட்டது நம் சம்பந்தர்பெருமானே,  இவர் இயற்றிய நான்கு பதிகங்கள் இவ்வமைப்பில் உள்ளது, இவை பழம்பஞ்சுரம் என்ற பண்ணில் உள்ளது. அவற்றில் ஒன்றான திருக்கழுமலம் பதிகத்தினை காண்போம்,  " உற்றுமை சேர்வது மெய்யினையே    உணர்வது நின்னருள் மெய்யினையே கற்றவர் காய்வது காமனையே    கனல்விழி காய்வது காமனையே அற்றம் மறைப்பதும் உன்பணியே    அமரர்கள் செய்வதும் உன்பணியே பெற்று முகந்தது கந்தனையே    பிரம புரத்தை யுகந்தனையே" இதில் பயின்றுவரும் "மெய்யினை...