திருஞான சம்பந்தரின் சிறப்புவாய்ந்த பதிகங்கள்-02:
திருஞான சம்பந்தரின் சிறப்புவாய்ந்த பதிகங்கள்-02: 1)ஒன்றிலிருந்து ஏழுவரை படிப்படியாய் ஏற்றி இறக்கி இயற்றப்படும் செய்யுள் "ஏழு கூற்றிருக்கை" எனப்படும். இதனை தேர்பந்தம் எனப்படும் சித்திரக்கவியாகவும் அமைத்து காட்டப்படும். இதனை கீழ்க்கண்ட படத்தில் காணலாம். திருபிரம்மபுர தலத்தில் சம்பந்தர் பாடும், "ஓருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை இருவரோ டொருவ னாகி நின்றனை" இத்தலத்து பதிகம்(1-128)வியாழக் குறிஞ்சிப்பண்ணில் திருஏழு கூற்றிருக்கை அமைப்பில் தோன்றியது. இதை மூலமாய் வைத்தே திருமங்கையாழ்வாரும், அருணகிரிநாதரும் பாடியுள்ளனர். 2)தாளத்திற்கேற்ப ஓசையுடன் விளங்கும் பதிகம் திருத்தாளச்சதி எனப்படும்! சீர்காழித்தலத்தில் இயற்றப்பட்ட இப்பதிகமும் வியாழக்குறிஞ்சி பண்ணால் பாடப்பட்டதே, பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப் பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ் சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ் சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ் சந்தித்தே யிந்தப்பார் சனங்க...